Saturday, October 23, 2010

மஷ்ரூம் பிரியாணி

மஷ்ரூம் பிரியாணி

Indian Recipe: Mushroom Biriyani - Cooking Recipe in Tamil
அசைவம் விரும்புகிறவங்களும் விரும்பாதவங்களும் கூட காளானை விட்டு வைக்க மாட்டாங்க. ஏன்னா, அம்புட்டு ருசி. ருசி மட்டுமல்லாமல் புரதச்சத்தும் நிறைய இருப்பதுதான் இயற்கை நமக்களித்த கொடை. இந்த சத்தான சுவையான காளான் பிரியாணியை ஈஸியா செஞ்சிடலாம்னா.. யாருக்குத்தான் பிடிக்காது. சட்டுபுட்டுன்னு சமைச்சு விருந்தாளிகளை அசத்திப்புடலாம்ல....
தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் எனப்படும் காளான் நல்ல வெள்ளையாக உள்ளது - 200 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
பிஸ்தா பருப்பு - 10
குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்).
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட்  1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டா - 1 சிறிய பாக்கெட்
தேங்காய்ப்பால் - 100 மி.லி.,
நெய் - 25 மி.லி.,
மல்லித்தழை நறுக்கியது - 1 கப்
மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பாசுமதி அரிசி ஒரு மடங்குக்கு தேங்காய்ப்பால் + தண்­ணீர் சேர்த்து இருபங்கு விட்டு குக்கரில் இரண்டு விசில் வரவிட்டு இறக்கவும்.
* வாணலியில் நெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு வதக்கவும்.
* சாதத்துடன் வதக்கியதைப் போட்டு அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, பிஸ்தா வறுத்துப் போடவும்.
* மஷ்ரூமை நான்கு துண்டுகளாக நறுக்கி இளம்சூடான தண்ணீ­ரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்­ணீர் வடித்து எடுக்கவும்.
* இதனை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் கலக்கவும். காளானில் புரதச்சத்து நிறைய உள்ளது.

1 comment:

  1. MUSHROOM BIRYANI, I NEVER HEARD OF THIS, ANY WAY ,SINCE IT IS NOT AVAILABLE IN HOTELS, I WILL TRY AT HOME

    ReplyDelete