Saturday, October 23, 2010

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - பீட்ரூட் பரோட்டா

Indian Recipe: Sweet Potato Beetroot Parotta - Cooking Recipe in Tamil
ஒரே போர்... எப்ப பார்த்தாலும் இந்த சப்பாத்தியானு அலுத்துக்கொள்ளும் குட்டீஸ்களுக்காக.. இதோ இந்த கலர்புல் பரோட்டா, பாத்தாலே சாப்பிட்ருவாங்க.. சாப்பிட்டா சொல்லவா வேணும்.. இன்னும் வேணும்னு கேட்பாங்க அந்த அளவுக்கு சுவையானது மட்டுமில்ல சத்தானதுங்கூட, ஓமம் சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும். அதனால எவ்வளவு சாப்பிட்டாலும் பயப்படத் தேவையில்ல.......சூப்பரா சாப்பிடட்டும் செய்து கொடுத்து அசத்துங்க..!

தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
பெரிய பீட்ரூட் - 1
சோயா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்
மஞ்சள் தூள் - 1\2 டீஸ்பூன்
ஓமம், காய்ந்த மிளகாய்-தனியா இரண்டையும் வறுத்து அரைத்த பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1\4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும்.
* பீட்ரூட்டைத் தோல் நீக்கி சீவிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோயா மாவு, மசித்த கிழங்கு, சீவிய பீட்ரூட், ஓமம், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்-தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சிறிது தண்­ணீர் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
* இதை அரை மணி நேரம் ஊற விடவும்.
* மாவு மிருதுவாகி விடும்.
* இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் இட்டு, சிறிது எண்ணெய் தடவி மடித்து, கொஞ்சம் கனமாக இடவும்.
* தோசைக் கல்லில் சப்பாத்தியைப் போட்டு இருபக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
* புதினா சட்னி (அ) வெள்ளரி-வெங்காயப் பச்சடியுடன் பரிமாறலாம்.

No comments:

Post a Comment