Friday, October 1, 2010

மன்மதன் அன்பு படத்தில் ஓவியா

களவாணி படத்தில் தனது அழகு மற்றும் துடிப்பான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தைக் களவாடிய ஓவியா, கமலின் மன்மதன் அம்பு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கடைசி காட்சியையே ஓவியா தோன்றுவது போலத்தான் எடுத்து முடித்துள்ளாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். சரி, இதில் ஓவியாவுக்கு என்ன ரோல்ன்னு தெரிஞ்சுக்கணுமா? கண்டிப்பாக கமலுக்கு ஜோடியாக அவரைப் போட முடியாது என்பதால், மாதவனின் ஜோடியாக நடிக்க வைத்துள்ளனர். 'கமல் சார் படத்தில் தலை காட்டுவதே பெருமைக்குரிய விஷயம்தானே', என்ற வழக்கமான பல்லவியையே நம்மிடமும் பாடினார் ஓவியா. இந்தப்படத்தில் இன்னொரு நடிகர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர், கமல் மகளுக்கு நாயகனாகிவிட்ட சூர்யா. 7-ம் அறிவு படத்தின் இரண்டு நாள் கேப்பில் இந்த ரோலை முடித்துக் கொடுத்தாராம். 'இது மட்டுமல்ல... இன்னும் சில ஆச்சர்யங்களும் படத்தில் உள்ளதாம். சில தினங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதைக் கொண்டாடும் விதத்தில் சைதாப்பேட்டையில் உள்ள கே.எஸ்.ரவிக்குமாரின் வீட்டில் நிறைவு விழா விருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, கமல், த்ரிஷா, மாதவன் உள்பட படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர். படத்தை டிசம்பரில் வெளியிட்டுவிடும் திட்டத்தில் இருப்பதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். இனி, கோலிவுட்ல கெஸ்ட் ரோல் பண்றதுதான் புது 'டிரென்ட் செட்'னு ஆக்டோபஸ் ஆருடம் சொல்லுச்சா..........

1 comment:

  1. ஒரு திரைப்படத்தின் பாத்திரங்கள் பல்வேறு கோணமுடையது. பலவேறு பாத்திரங்கள் உள்ளது. பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் அல்லது கதைக்கு ஏற்றாற்போல் புதிய நடிகர்களையோ அல்லது பழைய நடிகர்களையோ கூட நடிக்கவைக்கப்படும். நகைச்சுவையாக விடயங்களைச் சொல்லலாம். சிலவேளை பாத்திரத்தின் பொருத்தம் கருதி, பாத்திரத்துடன் பொருந்திப்போகும் ஒருவரை நடிக்கவைக்கலாம். ஒரு திரைப்படத்தின் கதையுடன் தொடர்பில்லாமல், ஒரு சில காட்சிகளிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ கூட, ஒரு புகழ்பெற்ற நடிகரை கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து, ரசிகர்களைக் கவருவதற்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களும் உள்ளன. நகைச்சுவை நடிகர்களை அல்லது நகைச்சுவையை விரும்புவோரை கவரும் விதமாக கதையுடன் தொடர்பில்லாத காட்சிகள் கூட சில திரைப்படங்களில் வந்துள்ளன.

    ஆனால், ஒரு திரைப்படத்தின் கதையுடனோ, கதாப்பாத்திரத்துடனோ எந்த வகையிலும் தொடர்பில்லாமல், "மன்மதன் அன்பு" எனும் திரைப்படத்தில் காட்டப்படும் "ஈழத்தமிழர்" பாத்திரமானது வேண்டுமென்றே ஒரு இனத்தை வழிய இழுத்து, இழிவு படுத்துதல் வகையிலானது என்பது திரைப்படத்தை பார்த்த எந்த ஒரு சாதாரணனுக்கும் புரியும்.


    இச்செயலானது ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கமல் செய்த செயலானது, கமலஹாசன் எனும் நடிகன் எத்தனை கேவலமானவன் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய செயலாகும்.

    ReplyDelete