Saturday, October 23, 2010

பாசிப்பருப்பு இட்லி

Healthy Foods: Moong Dhal Idli - Cooking Recipe in Tamil
பாசி(பயத்தம்) பருப்புல சாம்பார், கூட்டு, பொங்கல்னு செஞ்சி சாப்ட்டுருப்போம். இட்லிக்கு பாசிப்பருப்பு வெங்காய சாம்பார் வச்சும் சாப்பிட்டிருக்கோம். ஆனா, அதே பருப்புல இட்லி செஞ்சு சாப்பிட்டதில்லைனா... இப்ப ட்ரை பண்ணுங்க மிருதுவான பாசிப்பருப்பு இட்லிகளை..... இது குழந்தைகளையும் ரசிச்சு சுவைக்க வைக்கும் ஸ்வீட் இட்லிஸ்!
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
ஆப்பசோடா - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்கவும்.
* அதனுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி, பாதி நெய், ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
* நெய் தடவிய இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
* வெந்ததற்கு அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்.
* துண்டுகள் போட்டு சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

1 comment:

  1. மிருதுவான பாசிப்பருப்பு இட்லிகளை..... இது குழந்தைகளையும் ரசிச்சு சுவைக்க வைக்கும் ஸ்வீட் இட்லிஸ்!

    nice...

    ReplyDelete