Saturday, October 23, 2010

வெத்தலை-பூண்டு சாதம்

வெத்தலை-பூண்டு சாதம்

Best food for digestion: Garlic-Betel Leaves Rice - Cooking Recipe in Tamil
சாதத்துல பல வகைகள் செஞ்சு சாப்பிட்டிருப்போம்.... வெத்தலை-பூண்டு சாதம்னு ஒரு சாதம் இருக்கு தெரியுமா? பசியே எடுக்கல... செரிமானமே ஆகமாட்டேங்குதுனு சொல்றவங்க இந்த சாதத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நன்கு பசியெடுக்கும். வாயு சம்பந்தமான எந்த பிரச்சினையும் உங்களை அணுகாது.
தேவையான பொருட்கள்:
வெற்றிலை - 3
சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ஸ்பெஷல் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ஸ்பெஷல் மசாலாவுக்கு:
கருப்பு எள் - 1 டீ ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சுக்குப் பொடி - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
விரலி மஞ்சள் - அரை இன்ச்
உப்பு - தேவைக்கேற்ப
எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
செய்முறை:
* அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.
* கடாயில் நெய் விட்டு, பட்டை, சோம்பு வறுக்கவும்.
* பூண்டு சேர்க்கவும்.
* வெற்றிலையை நறுக்கிச் சேர்க்கவும்.
* ஸ்பெஷல் மசாலா பொடியும் உப்பும் சேர்த்து, தண்­ணீர் தெளித்து வதக்கவும்.
* வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, தீயைக் குறைத்து ஒரு கை தண்­ணீர் தெளித்துக் கலந்து, மூடி வைக்கவும்.
* 3 நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்

No comments:

Post a Comment